Saturday, April 29, 2017

// // Leave a Comment

நடப்பது எல்லாம் நன்மைக்கே

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.


நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை
Read More

Tuesday, April 25, 2017

// // Leave a Comment

வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்
Read More

Thursday, April 20, 2017

// // Leave a Comment

முட்டாள் கொக்கு - பஞ்சதந்திரக் கதைகள் | Foolish Crane - Panchtantra Moral Story | Video


Read More

Tuesday, April 18, 2017

// // Leave a Comment

ஜகன்மித்திரர்

பாண்டுரங்கன் அருளாட்சி புரியும் பண்டரிபுரம் அருகில் பாராளி என்னும் சிற்றூர் இருந்தது. அங்கு ஜகன்மித்திரர் என்பவர் வாழ்ந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தெரியவில்லை. தன்னை நாடியவர்க்கெல்லாம் நன்மை செய்து வந்ததால் உலகத்தின் நண்பர் என்ற பொருளில், "ஜகன்மித்திரர்' [ஜகம்-உலகம், மித்திரர்-நண்பர்] எனப்பட்டார்.

பாண்டுரங்கன் மீது அவர் அளவில்லாத பக்தி கொண்டிருந்தார். பாகவதர்களுக்கு அன்னதானம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த செல்வம் அனைத்தையும் வறியவர்களுக்கு வாரி வழங்கினார். சுயநலமில்லாமல் பிறருக்கு நன்மை செய்த இவரது புகழ் பரவியது. இதனை உள்ளூர்வாசிகள் சிலரால் தாங்க முடியவில்லை. ஞானமில்லாத அவர்கள் மனதில் பொறாமைத்தீ எரிந்தது. வேதம் படித்த அவர்கள், ஜகன்மித்திரரை வாதப்போருக்கு அழைத்தனர். சண்டையை சிறிதும் விரும்பாத ஜகன்மித்திரர், ""பக்திக்கும் வாக்குவாதத்திற்கும் வெகுதூரம். அன்பிருக்கும் இடமே ஆண்டவன் குடியிருக்கும் கோயில்,'' என்று விளக்கம் தந்து புறப்பட்டார்.

மக்கள் மத்தியில் ஜகன்மித்திரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்த எதிரிகளின் திட்டம்  எடுபடவில்லை. இருந்தாலும், என்றாவது ஒருநாள் ஜகன்மித்திரரை பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடவே இல்லை. கபீர்தாசர், நாமதேவர் போன்ற மகான்களின் வாழ்க்கை வரலாற்றை பிறருக்கு எடுத்துச் சொல்வதையும், பஜனைப்பாடல்களைப் பாடி பாண்டுரங்களைப் போற்றுவதையும் மித்திரர் தனது கடமையாகக் கொண்டிருந்தார். ஒருநாள் இரவு, வீட்டில் நாமசங்கீர்த்தனம் நடந்து கொண்டிருந்தது. எதிரிகள் முகமூடியுடன் வந்து, கூரையில் தீ வைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். பக்தனுக்கு நேர்ந்த துன்பத்தை பாண்டுரங்கனால் பொறுக்க முடியவில்லை. சுதர்சன சக்கரத்தை அனுப்பி நெருப்பால் ஏற்பட்ட பாதிப்பைத் தடுத்தார். ஊரே இதைக் கண்டு வியந்து போனது.

ஜகன்மித்திரரின் பக்தி திறத்தைக் கண்ட செல்வந்தர்கள் பலர், தங்கள் சொத்துக்களை அவரின் பெயருக்கு சாசனமாக எழுதிவைத்து தானதர்மம் செய்யும் படி வேண்டினர். அந்நாட்டு மன்னனும் இதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டான். வருமானம் உயரத் தொடங்கியதால், ஜகன்மித்திரர் திருக்கோயில் திருப்பணி, அன்னதானம் ஆகியவற்றை இன்னும் விரிவுபடுத்தினார்.

ஆனால், மீண்டும் சோதனை தொடங்கியது. பண்டரிபுரத்தை ஆண்டு வந்த மன்னன், நவாப் ஒருவனிடம் தோற்றுப் போனான். ஆட்சி மாறியதால், எதிரிகளின் கொட்டம் தலை தூக்கியது.  

அவர்கள் நவாப்பிடம், பக்தியின் பெயரால் ஜகன்மித்திரர் பலரையும் வஞ்சித்து சொத்துக்களை அபகரித்ததாக புகார் அளித்தனர். அவர்களின் நயவஞ்சகப் பேச்சை நவாப்பும் நம்பினான். ஜகன்மித்திரர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். நவாப் அவரிடம், ""சுவாமி, தாங்கள் பெரிய பக்தர் என்பதையும், ஊரார் சொத்துக்களை எல்லாம் சாசனம் பெற்றுக் கொண்டு தர்ம கைங்கர்யம் செய்வது பற்றியும் கேள்விப்பட்டேன். உங்களால் எனக்கும் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. எங்கள்  குலதெய்வ பூஜைக்குப் புலிப்பால் வேண்டும். காட்டிற்குச் சென்று பெண்புலியை அழைத்து வாருங்கள். இதற்கு தகுதியான நபர் நீங்கள் ஒருவரே என்பதால் உங்கள் உதவியை நாடியுள்ளேன்,'' என்றான். பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி தனியாளாக ஜகன்மித்திரர் காட்டிற்குப் புறப்பட்டார்.

ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பாண்டுரங்கனே அவர் முன் காட்சியளித்தார். ஒரு பெண்புலியாக உருவெடுத்து ஜகன்மித்திரருடன் வந்தார். புலியுடன் ஜகன்மித்திரர் வீதியில் வருவதைக் கண்ட மக்கள், வீட்டிற்குள் ஓடி மறைந்தனர். அரண்மனை வாசலை அடைந்ததும், புலி பயங்கரமாக உறுமியது. நவாப்பும் மற்றவர்களும் செய்வதறியாமல் ஓடி ஒளிந்தனர். ""நவாப்! ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் தானே புலி வேண்டுமென கேட்டீர்கள்! தேவையான பாலை எடுத்துக் கொள்ளுங்கள், வாருங்கள்,''என்று அழைத்தார்.

நவாப் நடுக்கத்துடன், ""சுவாமி! என்னை மன்னித்துவிடுங்கள். வஞ்சகம் படைத்த கயவர்களின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிட்டேன். உங்களின் பெருமையை உணராமல் சிரமம் கொடுத்து விட்டேன். தயவுசெய்து புலியை காட்டிற்குள் விட்டு விடுங்கள்,'' என்று மன்றாடினான். ஜகன்மித்திரர் நவாப்பின் வேண்டுகோளை ஏற்றார்.

அப்போது, மாயனாகிய பாண்டுரங்கன் தன் புலிவடிவை மறைத்து சங்கு சக்ரதாரியாக அருட்காட்சி அளித்தான். ஜகன்மித்திரருக்கு நவாப்பும் ஏராளமான பணம் தந்தான். பலகாலம் பாண்டுரங்கனைப் பாடி மகிழ்ந்த ஜகன்மித்திரர் அவரது திருவடியை அடைந்தார்.
Read More